குவிகம் -நவம்பர் 2015

குவிகம்  நவம்பர்   2015 இதழில் வழக்கம் போல  25 பக்கங்கள் இருக்கின்றன ! நீங்கள் கீழே ஸ்க்ரோல் செய்து  செல்லும்போது உங்களுக்கு முதல் பதினைந்து பக்கங்கள் மட்டும் தெரிந்தால் click older entries என்ற அறிவிப்பைக் கிளிக் செய்யவும். மற்றப்  பத்துப் பக்கங்களையும் பார்க்கலாம். அதேபோல்  click older entries என்ற தலைப்பை அது தோன்றும் சமயத்தில்  கிளிக் செய்தால்   சென்ற மாதங்களின் குவிகம் இதழையும் படிக்கலாம். பக்கத்தின் நடுவில்  " keep reading” என்று மெசேஜ் இருந்தால் அதைக் க்ளிக் செய்தால் முதலில் படித்ததன்  தொடர்ச்சி கிடைக்கும். … Continue reading குவிகம் -நவம்பர் 2015

விண்ணுலகில்   தீபாவளி

  மக்களெல்லாம் ஆடுகிறார் மண்ணுலகில் தீபாவளி மகேசர்களும் ஆடுகிறார்  விண்ணுலகில்   தீபாவளி   சிவபெருமான் முக்கண்ணால்  மன்மதனை எரித்துவிட்டு நெற்றியிலே காமன்சாம்பலை இட்டுக்கொண்டவந்தபின்னர்  பார்வதி தேவியும் குடங்குடமாய் எண்ணை மொண்டு யானைத்தலையையும் ஆறுமுகத்தையும் குளுப்பாட்டும் தீபாவளி   பட்டாடை தான் உடுத்தி லக்ஷ்மிவெடி கை சேர்த்து சக்கரத்தைச்  சுற்றி வரும் பரந்தாமன் வருகையிலே  கலைமகளும் கைமலரில் ஓலைவெடி எடுத்துவர நான்முகமும்  மயங்கித் தொழில் மறந்த தீபாவளி !   நாரதரும் ஞான வெடி கொண்டுவந்து கலகமிட முருகனும் மயில் மார்க்கம் சென்றுலகை வென்றுவர கணபதியோ சிவசக்தி அருளினால் சிவகாசி பெற்றுவிட … Continue reading விண்ணுலகில்   தீபாவளி

ஷாலு மை வைஃப்

“என்னடா பண்ணிக்கிட்டிருக்கே ராமசிவா!” “டேய் மாப்ளே ! என்னை ஸ்டைலா ராம்ஸ் அப்படின்னு கூப்பிடுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் ! நீயும் அந்த HR மேடம்  மாதிரி முழுப் பெயரைச் சொல்லிக் கூப்பிடறயே? "டேய்! இப்போ அதுவாடா  முக்கியம்? இன்னிக்குக் காலையிலே நான் முழிச்ச மூஞ்சி சரியில்லை ! "யார்  மூஞ்சிலடா  முழிச்சே. தினமும் என் மூஞ்சில தானே முழிப்பே ! நேத்து ஒரு நாள் நான் என் மாமா வீட்டுக்குப் போனபோது என்ன பண்ணினே ?” “எல்லாம் அந்த HR மேடம் மூஞ்சில  தான் முழிச்சேன்  !” “டேய் மாப்ளே! … Continue reading ஷாலு மை வைஃப்

அவளுக்காக அவள் – சுபா சுரேஷ்

   அவள்      கருவறை முதல் கல்லறை வரை      சிலுவைகளை மட்டுமே சுமப்பாள்.        சில சமயம்      கருவறையே கல்லறையாகவும்      மாறிவிடும்   அவள் என்று தெரிந்தவுடன்      கள்ளிப்பாலே தாய்ப்பாலாகவும்      மாறுவதுண்டு   அவள் என்று தெரிந்தவுடன்        “நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட      புழுதியில் எறிவதுண்டோ “      என்று இதற்குத்தான் எழுதினானோ பாரதி.        இறைவா நீ படைத்தவற்றுள்   … Continue reading அவளுக்காக அவள் – சுபா சுரேஷ்

கமலின் தூங்காவனம்

கமல் என்ற யானையை வைத்துக் கொண்டு  யானைப் படையே அமைக்கலாம். அல்லது பட்டத்து  யானையாகவோ கோவில் யானையாவோ  அலங்கரித்திருக்கலாம்.  இல்லையென்றால் தேக்கு மரக் காட்டையே  இழுக்கச் சொல்லியிருக்கலாம். .  அதையெல்லாம் விட்டுவிட்டு  செல்வா யானையை  வைத்துக் கொண்டு  ரோட்டில வித்தை காட்டுகிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. ஸ்கிரீன் பிளே கமல் தான். யானை தன் தலையிலேயே ……..  ஒரு ராத்திரியில  நடக்கிற ஸ்பீட் படம்  இது சந்தேகமேயில்லை.(அது தான் சாமி தூங்காவனம்!)  ‘இங்கிலீஷ் படம் படம் மாதிரி போகுதில்லே’ என்று பக்கத்தில் இருந்தவர் சொல்லும் போது படமே இங்கிலீஷ் ( இல்லே … Continue reading கமலின் தூங்காவனம்

இந்த மாதம் இதைப் படியுங்கள்!!! பரிசு பெறுங்கள்!!! -நூத்துக்கு எத்தனை ?

தமிழின் சிறந்த கதைகளென திரு எஸ்.ரா. அவர்கள் குறிப்பிட்டுள்ள 100 சிறுதைகள் இவை: இவற்றுள் நீங்கள் எத்தனை கதைகள் படித்திருக்கிறீர்கள்? அதிக எண்ணிக்கை படித்தவருக்கு Rs. 100 / பரிசு  காத்துக் கொண்டிருக்கிறது.  உங்கள் பெயர் , முகவரி, உடன் நீங்கள் படித்த சிறுகதைகளின் எண்ணிக்கையை அனுப்புங்கள்:  அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: ssrajan_bob@yahoo.com பொருள்: நூத்துக்கு எத்தனை  உதாரணமாக , 47 கதைகள் படித்திருந்தால் ,  “நூத்துக்கு நாற்பத்தேழு”  என்று எழுதி அனுப்புங்கள். கடைசித் தேதி :நவம்பர் 30 ந் தேதிக்குள் அனுப்பவும்.  .=========================================================== 1. காஞ்சனை – புதுமைபித்தன் 2. … Continue reading இந்த மாதம் இதைப் படியுங்கள்!!! பரிசு பெறுங்கள்!!! -நூத்துக்கு எத்தனை ?

யார் யாருக்கு சொன்னது?

அப்பா  தன் மகனிடம்  சொல்லும் வார்த்தைகள் இவை:   உனக்கு ஒண்ணும் தெரியாது முடியலைன்னா சும்மா இருக்க வேண்டியது தானே! ரோட்ட கிராஸ் பண்றப்போ எத்தனை தடவை சொல்லியிருக்கேன் என்னைப் பிடிச்சுக்.கோன்னு. நாங்க பேசிக்கிட்டிருக்கும் போது குறுக்கே பேசாதே. பொறுமையா சாப்பிடு, மேலெல்லாம் சிந்திக்காதே எப்பப் பார்த்தாலும் என்ன டி‌வி . பனியிலே வெளியிலே போகாதேன்னா கேக்கறதில்லே , அப்பறம் கையை வலிக்குது காலை வலிக்குதுன்னா என்ன பண்ண முடியும்? ரெண்டு இட்டிலியெல்லாம் போறாது, இன்னும் ஒண்ணு சாப்பிடு. பாத் ரூமை நீட்டா யூஸ்பண்ணத் தெரியலை. டாக்டர் கிட்டே வரமாட்டேங்கிரே , … Continue reading யார் யாருக்கு சொன்னது?

பூமராங் …. நித்யா சங்கர்

     “ டாக்டர்.. என்ன சொல்றீங்க..? என்று கேட்டான் நாவரசு பதற்றத்துடன்.  அவன் மனைவி மேகலை கவலையோடு அருகில் நின்றிருந்தாள்.       அந்த ஐந்து மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்தது டாக்டர் செல்வராகவனின் கிளினிக்.       “ ஐ ஆம் ஸாரி.. மிஸ்டர் நாவரசு.. காயம் என்னவோ சின்னக் காயம்தான்.  பட்.. ஓபன் வூண்ட்.. உங்க வைஃப் நன்றாகக் கழுவி ரெண்டு நாளா காயத்தை டிரஸ் செய்து கொண்டிருந்தது வாஸ்தவம்தான்.  ஆனா காயம் இன்ஃபெக்ட் ஆயிருக்கு.  அது எத்தனை தூரம் புரையோடி இருக்குன்னு பார்க்கறதுக்கு சில … Continue reading பூமராங் …. நித்யா சங்கர்

அமெரிக்காவில் பையன் – இந்தியாவில் அப்பா – இவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்?

கம்ப்யூட்டர் , இன்டர்நெட் இவற்றை எல்லாம் தங்கள் பையன்கள்  -பெண்களிடமிருந்து தெரிந்து கொள்ளத் துடிக்கும் ஆர்வக் கோளாறுள்ள அப்பா ஒருவரின் கதை. அவர் தன் பையனுடன் நடத்தும் உரையாடலைக் கேளுங்கள்! உங்கள் வீட்டிலும் நடப்பது போலத் தெரிகிறதா? வீட்டுக்கு வீடு வாசப்படி! ஹிந்தியில் இருக்கிறதே என்று கவலைப்படாதீர்கள்! நன்றாகவே புரியும் !! Continue reading அமெரிக்காவில் பையன் – இந்தியாவில் அப்பா – இவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்?